​சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சக்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்

Loading...

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சுகர் ஃப்ரீ மாத்திரைசர்க்கரை வியாதி உள்ளவர்களும், உடலை கட்டுக்கோப்போடு வைக்க நினைப்பவர்களும் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சக்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்வார்கள்.
இது குறைவான சக்தியை கொடுப்பதாலும், குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யாது என்பதற்காகவும்தான் இந்த செயற்கை இனிப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கூடுதலாக, சுகர் ஃப்ரீ எடுத்து கொள்வதால் இன்னும் பசியை தூண்டி, உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறுகின்றார்கள் மருத்துவர்கள்.
இனிப்பிற்கும் சக்திக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் இந்த இரண்டிலும் சம நிலை செய்யத் தவறுவதால் தான், கலோரி அளவை மூளையானது அதிகரிக்கச் செய்கிறது.
சுகர் ஃப்ரீ என்றால் அது கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு இல்லாத உணவு என அர்த்தம் இல்லை. சில சுகர் ஃப்ரீ உணவுகளில் மற்ற உணவுகளில் உள்ளது போலவே கலோரி, கார்போஹைட்ரேட் உள்ளன. எனவே இதை சுகர் ஃப்ரீ என்று சொல்ல முடியாது. இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் முன் அதன் லேபிளைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்தேகம் இருந்தால் டாக்டர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப்பெற வேண்டும்.
செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சோம்னியா என்ற தூக்கமின்மை வியாதி ஏற்பட வாய்ப்புண்டு மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டியை தூண்டும். இதனால் போதிய சக்தி குறைந்து பலஹீனம் ஏற்படும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply