​உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ குறிப்புகள்

Loading...

​உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ குறிப்புகள்உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்.
வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்காயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும். வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து. இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும். வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும். வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply