ஹேர் கலரை நீக்க வேண்டுமா

Loading...

ஹேர் கலரை நீக்க வேண்டுமாஇன்றைய கால இளைஞர்களுக்கு தலை கூந்தலானது விரைவிலேயே நரைத்துவிடுகிறது. அதற்காக அவர்கள் பல நிறங்களில் கூந்தலுக்கு கலரை அடிக்கின்றனர். அவ்வாறு அடிப்பது சில சமயம் தவறான பலனை தந்துவிடும். அப்படி அடித்துவிட்டு, அதனை நிறுத்த வேண்டும் என்றால் கூந்தல் இன்னும் மோசமாக ஆகிவிடும். அதனால் அதற்காக அடிமையாகிவிட்டது போல கூட இருக்கும். அவ்வாறு தலை கூந்தலுக்கு அடித்த கலரானது பிடிக்கவில்லை என்றால், அதனை எளிதாக நீக்குவதற்காக சில வழிகள் இருக்கிறது.வைட்டமின் சி மாத்திரைகள் :

வைட்டமின் சி மாத்திரைகள் ஒரு சிறந்த கலர் ரிமூவர். ஆகவே கடைக்குச் சென்று மிகவும் விலைக் குறைவான வைட்டமின் சி மாத்திரைகளை வாங்கினாலே அதற்கு போதும். இதற்கு விலை அதிகமான மாத்திரைகளை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் 25-30 மாத்திரைகளை வாங்கி பொடி செய்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பிறகு அதனை தலை முடிக்கு தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பார்த்தால் கூலுந்தலானது முதலில் இருக்கும் நிறத்தில் இருந்து சற்று நிறம் குறைந்து காணப்படும்.சூடான எண்ணெய் :

அது ஒரு சிறந்த எளிதான வழி. எண்ணெயை சூடேற்றி சிறிது குளிர வைத்து, தலைக்கு தடவி ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். அதனால் கூந்தலில் இருக்கும் கலரானது போவதுடன், கூந்தலானது ஆரோக்கியமாக இருக்கும். இதனை அடிக்கடி செய்யக் கூடாது, வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும் இல்லையென்றால் கூந்தலானது பாதிப்படையும்.டிடர்ஜெண்ட் அல்லது சோப்பு :

வீட்டில் குளிக்கும் போது பயன்படுத்தும் சோப்புகள் அல்லது துணிகளுக்கு போடும் டிடர்ஜெண்ட் பயன்படுத்தினாலே கூந்தலில் இருக்கும் கலரானது போய்விடும். ஆனால் அப்படி போடும் போது பார்த்து போட வேண்டும். ஏனெனில் ப்ளீச் பொருளானது சில சோப்புகளில் அல்லது டிடர்ஜெண்டில் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டதை பயன்படுத்தும் போது கூந்தலானது அதிகம் பாதிக்கப்படும். மேலும் இவ்வாறு சோப்பு அல்லது டிடர்ஜெண்ட் போட போட கலரானது போய்விடும்.ஆன்டி-டான்டிரப் ஷாம்பு :

ஹேர் கலரை நீக்குவதில் ஆன்டி-டான்டிரப் ஷாம்பு மிகவும் சிறந்தது. இந்த ஷாம்புவை தலைக்கு போட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதால், தலை முடியில் இருக்கும் கலரானது சீக்கிரம், விரைவில் போய்விடும்.ஹேர் கலர் ரிமூவர் :

மேற்கூரிய எதுவுமே பயன்படவில்லை என்றாலோ அல்லது மறுப‌டியும் கூந்தலுக்கு கலரை அடிக்கப் பிடிக்கவில்லை என்றாலோ, அதற்கு சிறந்த வழி கடைக்குச் சென்று ஹேர் கலர் ரிமூவரை வாங்கி போடுங்கள். அப்படி ஹேர் கலர் ரிமூவரை வாங்கும் போது நன்கு விசாரித்து, எதை பயன்படுத்தினால், கூந்தல் உதிராமல் கலர் மட்டும் போகும் என்று பார்த்து கேட்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் கூந்தல் தான் பாதிக்கப்படும்.

இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலில் இருக்கும் கலரானது போய்விடுவதோடு, கூந்தலும் பாதிப்படையாமல் பளபளப்போடு ஆரோக்கியமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply