ஸ்லைஸ்டு சிக்கன் இன் கார்லிக் ஸாஸ்

Loading...

ஸ்லைஸ்டு சிக்கன் இன் கார்லிக் ஸாஸ்
தேவைப்படும் பொருட்கள் :

ஸோயா ஸாஸ் – 1/2 கோப்பை
வெள்ளைப் பூண்டு – 8 பல்
சர்க்கரை – 1/2 கோப்பை
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
சோளமாவு – 1 1/2 தேக்கரண்டி
ஷெர்ரி – 2
இறைச்சி வேக வைத்த நீர் – 1/2 லிட்டர்
சமையல் எண்ணெய் – 50 மி.லி.
குடை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
கோழி இறைச்சி – 1/2 கிலோ


முன்னேற்பாடு – 1

கோழிக் கறியைக் கழுவவும்
சின்னத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்
இதனை ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு நீர் ஊற்றவும்
அடுப்பில் ஏற்றி நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்


முன்னேற்பாடு – 2

முதலில் பூண்டை உரித்துக் கொள்ளவும்
அதனை அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
விழுதானவுடன் ஒரு பாத்திரத்தில் அதைப் போடவும்
அதனுடன் சோயா சாஸைக் கலக்கவும்
அடுப்பில் ஏற்றவும்
கலவையைக் கொதிக்க விடவும்
இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் இறக்கி வைத்து விடவும்


முன்னேற்பாடு – 3

கேரட்டைக் கழுவி தோல் நீக்கி, துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும்.


முன்னேற்பாடு – 4

பீன்ஸைக் கழுவி ஓரங்களில் வரும் நாரை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.


முன்னேற்பாடு – 5

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.


முன்னேற்பாடு – 6

குடை மிளகாயைக் கழுவி சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.


முன்னேற்பாடு – 7

ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை எடுத்து அதை கொதிக்க விடவும். கொதித்த நீரை காய்கறிகள் வைத்திருந்த பாத்திரத்தில் ஊற்றவும்.


முன்னேற்பாடு – 8

ஐந்து நிமிடங்கள் பொறுக்கவும், ஒரு வெள்ளைத் துணியால் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
நீரில்லாமல் காய்கறிகளை மட்டும் பாத்திரத்திலேயே வைத்துக் கொள்ளவும்


முன்னேற்பாடு – 9

ஒரு வாணலியில் எண்ணெயை விடவும்
காய்ந்த பின்னர், இதை இறக்கி வைத்து விடவும்
இப்போது தனியே எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை மட்டும் எடுத்து இந்த எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும். ( சுமார் நான்கு நிமிட நேரம் வதக்கவும் )


தயாரிப்பு முறை :

இப்போது மீண்டும் வாணலியை அடுப்பில் ஏற்றவும்
வெட்டி, வேக வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கறியை அதில் போடவும்
நன்றாக வதக்கவும்
இதன் பின் ஏற்கனவே இறக்கி வைத்திருக்கும் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை எடுத்து வாணலியில் ஊற்றவும்
அதில் சர்க்கரையைப் போடவும்
பூண்டு விழுதைச் சேர்த்துக் கொள்ளவும்
சோயா ஸாஸை ஊற்றவும்
உப்பைப் போடவும்
மிளகுத் தூளைக் கலக்கவும்
நன்றாகக் கொதிக்க விட்டு விடவும்
கொதித்தவுடன் அனலைக் குறைக்கவும்
ஒரு பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்து அதில் சோள மாவைக் கொட்டிக் கரைத்துக் கொள்ளவும்
இந்தக் கரைசலைக் கலவையில் கொட்டவும்
நன்றாகக் கலக்கி விடவும்
இது ஓரளவு கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply