ஸ்மாட் போன்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் பேப்லெட்களின் எழுச்சி

Loading...

ஸ்மாட் போன்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் பேப்லெட்களின் எழுச்சிபுதிய போன் வாங்கலாம் என முடிவு செய்து ஸ்மார்ட் போன் வாங்குவதா பேப்லெட் வாங்குவதா எனும் குழப்பத்தில் இருக்கிறீர்களா? அல்லது பேப்லெட் வாங்கலாமா என்ற தடுமாற்றம் இருக்கிறதா? எப்படி இருந்தாலும் சமீபத்திய பேப்லெட் தொடர்பான ஆய்வு உங்கள் குழப்பத்தைத் தீர்க்க உதவலாம்.

எப்படி என்று கேட்கிறீர்களா? யாஹு நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபிளரி மொபைல் ஆய்வு நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு, இப்போது பேப்லெட்களுக்குக் காலம் எனத் தெரிவிக்கிறது.

அதாவது ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் டேப்லெட்டின் ஆற்றல் இணைந்த பேப்லெட்களை வாங்கத் தொடங்கியிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. போனில் பேசும் நேரம் குறைந்த திரையைப் பார்த்தபடி படிப்பது, சேட் செய்வது, கேம் ஆடுவது ஆகிய செயல்களில் ஆர்வம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

கிட்டத்தட்ட 160 கோடி சாதனங்களின் பயன்பாட்டை அலசி ஆராய்ந்து கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் பேப்லெட் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு சிறிது சரிந்திருக்கிறது. ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் பேப்லெட்டிலும் ஆண்ட்ராய்டுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply