ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

Loading...

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

பால் – 2 கிளாஸ் (உங்கள் வீட்டுகிளாஸ் பெரிய டபரா அளவுக்கோ அல்லது கோலா பானங்களின் மூடி சைஸூக்கோ இருக்கலாம். ஆனால் ஒரு கிளாஸ் என்பதை 200 மி.லி. அளவாகத்தான் நீங்கள் அர்த்தம் கொள்ள வேண்டும்!)
ஸ்ட்ராபெர்ரி – 4
சர்க்கரை – 100 கிராம்
பாலாடை க்ரீம் – கொஞ்சம்
ஐஸ்கட்டி – 15 துண்டுகள்
ரோஸ்எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்செய்முறை:

பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அதோடு சர்க்கரையையும் ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும். நுரை பொங்கிய நிலையில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். ஒருவேளை ஸ்ட்ராபெர்ரி பழம் கிடைக்கவில்லை எனில், அதற்குப் பதிலாக சப்போட்டாப்பழம் இரண்டைச் சேர்த்து அதே செய்முறையோடு தயார் செய்யுங்கள் “சப்போட்டா மில்க் ஷேக்” ரெடி! நுரை பொங்கியபடியே சாப்பிட்டால்தான் டேஸ்ட் இல்லையென்றால் வேஸ்ட்.

எல்லா ரெட் கலர் பழங்களிலேயும் “லைக்கோடின்” சத்து அடங்கியிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற இரத்தத்திலேயும் ஐம்பது சதவீதம் அடங்கியிருக்கு. இது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாத்தான் சத்துக்குறைவு, இரத்த சோகை நோய்களெல்லாம் வருது. (பழத்தோலை உரிச்சா ரெட் கலர்ல இருக்கும்) ரெட்கலர் பழங்களைச் சாப்பிடுவதால் இப்பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் நார்ச்சத்து அடங்கியிருப்பதால் “மலச்சிக்கல்” பிரச்சினைகள் ஃப்ளைட் ஏறி பறந்து விடும். கர்ப்பிணிப் பெண்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply