வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படி

Loading...

வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படிகாய்ச்சல் என்பது உடலில் சத்துக்கள் குறைவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் ஏற்படும். இன்றைய காலக்கட்டத்தில் உணவிலும், நீரிலும், காற்றிலும், அனைத்திலும் கிருமி, பாக்டீரியா என்று பரவி காய்ச்சலை உண்டாக்குகிறது. ஸ்வைன் காய்ச்சல், சிக்கன் குனியா என்று புது புது காய்ச்சல்களை கேள்விப்பட்டு வருகிறோம். இத்தகைய காய்ச்சலுக்கு தேவை நல்ல ஓய்வு மற்றும் நீரேற்றம் மிக முக்கியம். மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அவர் தரும் மருந்துகள் காய்ச்சலை குணப்படுத்த உதவும்.

முதியவர்களுக்கு அல்லது நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, இத்தகைய காய்ச்சல் மிகவும் ஆபத்தை உண்டாக்கும். அதனால் காய்ச்சலுக்கு நல்ல சிகிச்சை கொண்டு, அதைத் தடுக்க குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.


வீட்டு சிகிச்சை:

வீட்டிலேயே காய்ச்சலுக்கு நல்ல மருந்து நல்ல தூக்கத்தை மேற்கொள்வது தான். நன்கு தூங்கி ஓய்வெடுத்து, தெளிவான திரவங்களை குடிப்பது மற்றும் உடலுக்கு முடியாத கடுமையான வேலைகளை செய்யாமல் இருப்பது, சீக்கிரம் குணமடைய ஏதுவாயிருக்கும் .

காபி அல்லது ஆல்கஹால் போன்ற எந்த உணவு பண்டங்களையும் எடுத்துகொள்ள வேண்டாம். அத்தகைய பானங்கள் உடலில் நீர் அகற்றலை ஏற்படுத்தும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை இழக்க நேரிடும். ஆகவே ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்து கொள்வதன் பொருட்டு நோயை எதிர்த்து போராட உதவும். குறிப்பாக தெளிவான சூப் குடிப்பது நல்லது. இது ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் நீறேற்றத்தை உண்டாக்க உதவுகிறது.


காய்ச்சல் மருந்துகள்:

காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. ஆகவே அதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே ஆன்டி-வைரஸ்களை எடுத்து கொள்வது சிறப்பாகும். மேலும் அருகில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ, இத்தகைய காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தால், அவர்களை உடனே இந்த ஆன்டி-வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ள சொல்லவும். இதனால் இந்த காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.


காய்ச்சல் தடுப்பூசி:

காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதுவே சிகிச்சைக்கு முற்றிலும் சிறந்த வழி. ஒவ்வொரு புது காய்ச்சல் உரு கொண்டதும், அதற்கான தடுப்பூசி வெளியிடப்படுகிறது. ஆகவே இந்த தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம், காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக கஷ்டத்தைக் கொடுக்கும. இத்தகையவர்கள் ஒவ்வொரு வருடமும், பொருத்தமான காய்ச்சல் தடுப்பூசியை எடுத்து கொள்வது நல்லது.

கூடுதலாக, நல்ல சுகாதாரத்தை மேற்கொள்வதும், உடற்பயிற்சியை மேற்கொள்வதும் சிறந்தது. கழிவறைக்கு சென்று வந்தால், உடனே கைகளை அலம்புவது அல்லது வெளியில் சென்றாலோ அல்லது பொது போக்குவரத்து வாகனங்களில் கிருமி நிரப்பப்பட்ட சூழலில் இருந்து வீடு வந்ததும், கை கால் அலம்புவது நோயை எதிர்கொள்ளும். முக்கியமாக யாராவது தும்மினாலோ இருமினாலோ, உடனே கண்களை அல்லது மூக்கை தேய்க்க வேண்டாம். உடனே கை கழுவுவது மிகவும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply