வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா

Loading...

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமாவேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்போது அவர்களுக்கு எடை குறைந்த சிறிய குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக நெதர்லாந்து நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக 30 வார கர்ப்பத்தில் இருந்த 4,700 பெண்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டபோது இவர்களுக்கு சுமார் 2 கிலோவுக்கும் சற்று அதிக எடை குழந்தைகளே பிறந்தன.

ஆனால் பொதுவாக புதிதாக பிறக்கும் குழந்தை 3.2 கிலோ முதல் 3.4 கிலோ எடை இருக்க வேண்டும். அத்துடன் குழந்தையின் தலைப்பகுது சுற்றளவும் 1 சென்டி மீட்டர் குறைவாக இருக்குமாம். ஆனாலும் பிறக்கும் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு இருக்காது என்று ஆறுதலைத் தருகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு இந்த குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் அதிக வேலைப்பளுவில் ஈடுபடுவதால் கர்ப்பப்பையில் இருக்கும் சிடுவிற்கு ரத்தம் , சத்துப்பொருள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை போதுமான அளவில் கிடைப்பதில்லை என்பதே ஆகும். ஆகவே இத்தகைய கர்ப்பிணிகள் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply