வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி

Loading...

வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
தேவையானவை:

முளை கட்டிய பாசிப்பயறு – ஒரு கப்
புழுங்கல் அரிசி – 2 டேபிள்ஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய காய்கறிகள் – அரை கப்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
நறுக்கிய கொத்துமல்லி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றிப் பரிமாறவும்.

எண்ணெய் சேர்க்காத உணவாதலால் இதயத்துக்கு நிஜமாகவே இதமானது. இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றுவதற்கு பதிலாக, துணி போட்டு இந்த இட்லி செய்து தந்தால் இன்னும் நல்லது. பயறைத் தோலுடன் அரைத்துச் செய்வதால் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply