விழிப்புலன் இழந்தவர்களுக்கும் ஸ்மார்ட் கைக் கடிகாரம்

Loading...

விழிப்புலன் இழந்தவர்களுக்கும் ஸ்மார்ட் கைக் கடிகாரம்தென் கொரியா செப்டம்பர் 4- உலகில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 285 மில்லியன். 5 புலன்களில் ஒன்றான பார்க்கும் திறனை இழந்த பார்வையற்றவர்கள் சுவை,தொடுதல்,நுகர்தல் மூலம் வெளி உலகத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையிலே, 1842-இல் லூயிஸ் பிரேயில் என்பவர் கண்டுபிடித்ததே பிரெயில் எனப்படும் குறியீட்டு முறை.இதன் மூலம், பார்வையாற்றவர்கள் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை தங்களின் விரல்களின் மூலம் அறிந்துக் கொள்கிறார்கள்.

இதனிடையே, பார்வையாற்றவர்கள் பிரேயில் முறைப்படி உபயோகிக்க ஸ்மா
ர்ட் கடிகாரத்தை உருவாக்கியுள்ளது தென் கொரியா நிறுவனம் ஒன்று.டாட் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது தான் உலகில் பார்வையற்றோருக்காக முதல் ஸ்மார்ட் கடிகாரம்.மேலும், இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் வழி குறுஞ் செய்தி அனுப்புதல்,ப்ளூடூத், வழி காட்டுதல் போன்ற வசதிகளை அனுப்பலாம்.

இந்த ஸ்மார்ட் கடிகாரம் டிசம்பர் மாதத்தில் முதல் கட்டமாக அமெரிக்காவில் வெளியிடப்படும் எனவும், அதன் பின் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும் எனத் தெரிவ்த்தது அந்த தென் கொரியா நிறுவனம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply