விற்பனையில் முந்தியது ஆப்பிள்

Loading...

விற்பனையில் முந்தியது ஆப்பிள்சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி விற்பனையை ஆப்பிள் நிறுவனம் முந்தியுள்ளது. சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் முன்னணியில் உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி ஜியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையை ஆப்பிள் முதல் முறையாக முந்தியுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் படி ஆப்பிள் நிறுவனம் 2015 ன் முதல் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 14.7 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. ஜியோமி நிறுவனம் 13.7 சதவீத சந்தையைப் பிடித்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மார்க்கெட் ரிசர்ச்சர்ஸ் இண்டர் நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்(Market Researchrs international data corporation) இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு அடுத்து ஹூவய், சாம்சங் மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. இதில் ஹூவய் சீனாவைச் சேர்ந்த நிறுவனமாகும்.

சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையின் முதலிடத்தை பிடிக்க உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. கடந்த ஐந்து காலாண்டுகளாக நான்கு நிறுவனங்கள் இந்த இடங்களைத் தக்க வைத்திருந்தன. சாங்சங் மற்றும் லெனோவா நிறுவனங்கள் இதில் முன்னணியில் இருந்துள்ளன.

2015 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள், ஜியோமி, ஹுவய், சாம்சங் மற்றும் லெனோவா 57.8 சதவீத சந்தையைப் பிடித்திருந்தன. இதேகாலகட்டத்தில் ஆப்பிள் ஹூவய், மற்றும் ஜியோமி நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. சாம்சங், மற்றும் லெனோவா ஏற்றுமதி குறைந்துள்ளது என்றும் அந்த புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply