விரைவில் iPad Pro

Loading...

விரைவில் iPad Proஅப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய iPad Pro டேப்லெட்டினை விரைவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்து நொவம்பர் மாதமளவில் விற்பனைக்கு விடவுள்ளது.

12.9 அங்குல அளவு, 2732 x 2048 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Apple A9X Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர 256GB சேமிப்பு நினைவகமும் தரப்படவுள்ளது. எனினும் இந்த டேப்லெட் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் Apple A9X Processor ஆனது சிறந்த வினைத்திறன் உடையது எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றுடன் இந்த Processor அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply