வாழைப்பழ சாக்லேட்

Loading...

வாழைப்பழ சாக்லேட்கனிந்த வாழைப்பழம் – 10
பால் பவுடர் – அரை கப்
சர்க்கரை – முக்கால் கப்
கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – அரை கப்
நைஸாக சீவிய முந்திரி
பிஸ்தா – 4 டீஸ்பூன்செய்முறை:-

கொக்கோ பவுடர், பால் பவுடர் இரண்டையும் சலித்து வைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி, பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

அடி கனமான, வாயகன்ற ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, வாழைப்பழக்கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சுருண்டு வந்ததும், பால் பவுடரைத் தூவி, வெண்ணெயைப் போட்டுக் கிளறவும், தீயைக் குறைத்து, கலவை கையில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறவும்.

பிறகு, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாக்கி, முந்திரி, பிஸ்தா துண்டுகளை மேலே தூவவும். ஆறிய பின் வில்லைகள் போடவும்.

ஒரு வாரம் வரை இந்த சாக்லேட்டை வைத்திருக்கலாம். வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply