வாழைத்தண்டு டயட் கிரேவி

Loading...

வாழைத்தண்டு டயட் கிரேவி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
பாசிப்பருப்பு – 7 டீஸ்பூன், தக்காளி – 2, சின்ன வெங்காயம் – 50 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, சோம்பு- சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, தயிர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :
பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த சின்ன வெங்காயவிழுது, மஞ்சள்தூள், மிளகாயத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டு, தயிர், உப்பு, சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கி கொத்தம்மல்லித்தழை தூவிப் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply