வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா

Loading...

வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமாவாட்ஸ்ஆப் செயலியை பயன் படுத்துவோர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 10 கோடி நபர்கள் புதிதாக இந்த செயலியை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

இந்த தகவலை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோம் தன்னுடைய பேஸ்புக் நிலைத்தகவலில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 1900 கோடி டாலர் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் பயன்படுத்து வோர்களின் எண்ணிக்கை உயர்ததற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னதாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. கடந்த நவம்பரில் 7 கோடி இந்தியர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக நிறுவனம் கூறியிருந்தது.

இந்தியாவில் ஹைக், விபர் உள்ளிட்ட செயலிகளுடன் வாட்ஸ்ஆப் போட்டிபோடுகின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply