வாட்ஸ் அப் கால் முற்றிலும் இலவசம் இல்லை இதோ விவரங்கள்

Loading...

வாட்ஸ் அப் கால் முற்றிலும் இலவசம் இல்லை இதோ விவரங்கள்அண்மையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அழைப்புகளை ஏற்படுத்திப் பேசுவது, இதன் பயனாளர்கள் இடையே அதிகரித்து வருகிறது. “இது முற்றிலும் இலவசம். மொபைல் போன் அழைப்புகள் போல் இல்லை” என மக்கள் கருதுகின்றனர். சற்று தீவிரமாகப் பார்த்தால், இந்த வகை அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை என்பது புரியும். இதனைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் வாட்ஸ் அப் வழி அழைப்புகளை மேற்கொள்ளும் முன் சற்று யோசிப்பீர்கள்.


சில விவரங்கள் இதோ :

வாட்ஸ் அப் அழைப்பு என்பது, நம் மொபைல் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாய அடிப்படை. இணைய இணைப்பிற்கு நம் திட்டத்திற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். வை பை இணைப்பு இருந்தால், இதன் சுமை குறையும். இல்லையேல், நம் இணைய இணைப்பின் திறன், பணம் குறையும்.

வாட்ஸ் அப் அழைப்பின் போது, 60 விநாடிகளில் ஏறத்தாழ 1.3 எம்.பி. டேட்டாவினைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, சற்று குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.

இந்தியாவில், ஒரு சராசரி 3ஜி டேட்டா திட்டம் மாதத்திற்குக் குறைந்தது ரூ.200 முதல் ரூ.350 வரை செலவாகிறது. இது குறைந்த அளவு தான். இதன் அடிப்படையில் பார்த்தால், நிமிடம் ஒன்றுக்குக் குறைந்தது 20 பைசா செலவாகும். வழக்கமான மொபைல் போன் பயன்பாட்டிற்கு நாம் 30 முதல் 80 பைசா வரை செலவழிக்கிறோம்.
500 எம்.பி. டேட்டா திட்டம் கொண்டிருந்தால், வாட்ஸ் அப் அழைப்பு 6 மணி நேரம் பேசும் அளவைக் கொடுக்கும்.

3ஜி அல்லது 4ஜி வகையில், நிமிடத்திற்கு 1.3 எம்.பி. என எடுத்துக் கொண்டால், நாள் ஒன்றுக்கு 11 நிமிடம் பேசும் காலம் கிடைக்கும்.

இது அழைப்பவருக்கானது மட்டும் என எண்ணிவிடாதீர்கள். அழைப்பினைப் பெறுபவரும் இதே அளவிற்கு டேட்டா செலவு அமையும். ஆனால், வழக்கமான மொபைல் அழைப்பில், அழைப்பினைப் பெறுபவருக்கு எந்த செலவும் இல்லை. எனவே, அழைப்பை ஏற்படுத்துபவர் மற்றும் அழைப்பினைப் பெறுபவருக்கான இரு வழி செலவினையும் பார்த்தால், வழக்கமான மொபைல் அழைப்பே குறைவானது என்ற முடிவை நாம் எடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply