லெமன் பெப்பர் கார்லிக் சிக்கன்

Loading...

லெமன் பெப்பர் கார்லிக் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் துண்டுகள் – அரைக்கிலோ
லெமன் ஜூஸ் -1 பழம்
மிளகுத்தூள் – 1 -2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 4 – 6 பற்கள் அத்துடன் சிறிது பார்ஸ்லி இலைகள் அல்லது கொத்தமல்லி சேர்த்து நன்கு தட்டிக் கொள்ளவும். (நான் பார்ஸ்லி இலை தான் சேர்த்தேன்.கொத்தமல்லி இலை போலவே இருக்கும் மணம் வித்தியாசப்படும்)
ஆனியன் பவுடர் – அரை டீஸ்பூன் (விரும்பினால்)
ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.


செய்முறை:

சிக்கன் துண்டுகள் சுத்தம் செய்து நன்கு அலசி இறுதியாக அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்ட தண்ணீரில் அலசி சிக்கன் வடிகட்டி வைக்கவும்.
சிக்கன் தவிர மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும்.பின்பு சிக்கனையும் சேர்த்து நன்கு பிரட்டவும்.
குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். அல்லது முதல் நாளே ஊற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
பின்பு ஊறிய சிக்கனை ஃப்ரிட்ஜில் இருந்தால் அரைமணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைக்கவும்.
ஏர் ஃப்ரையரை முதலில் 3 நிமிடம் முற்சூடு செய்யவும்.
பின்பு ஏர் ஃப்ரையரில் இப்படி ஒரு ஸ்டாண்டு இருந்தால் மேலே சிக்கன் துண்டுகளை வைக்கவும்.கொஞ்சமாக ஃப்ரை செய்வதாக இருந்தால் இப்படி செய்யலாம்.180 டிகிரி செட் செய்து ஏழு நிமிடம் வைத்து ஃப்ரை யரை ஓட விடவும்.
ஏழு நிமிடம் கழித்து சிக்கன் துண்டுகள் ஓரளவு வெந்து காணப்படும்.
திருப்பி வைத்து மீண்டும் ஏழு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான ஏர் ஃப்ரைட் லெமன் பெப்பர் கார்லிக் சிக்கன் ரெடி.
மொத்தமாக ஆறேழு துண்டுகள் வைக்க வேண்டுமானால் இப்படி கூடை யில் வைத்து ஃப்ரை செய்து எடுக்கலாம்.
அப்படியே சும்மா ஸ்டார்டர் மாதிரி ஸ்பைஸி டிப்பிங் சாஸில் டிப் செய்து சாப்பிடலாம்.
உங்கள் விருப்பம் போல் பரிமாறவும்.மேலே கிரிஸ்பாகவும் உட்புறம் சாஃப்டாக இருக்கும். எஞ்சாய் !
பேலியோ டயட் இருப்பவங்க இந்த முறையில் செய்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply