யமாஹாவின் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ரோபோட் மக்களின் மனதைகவர்ந்த வீடியோ

Loading...

யமாஹாவின் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ரோபோட் மக்களின் மனதைகவர்ந்த வீடியோசுறுசுறுப்புக்கும், புத்தம்புதிய தொழில்நுட்பத்துக்கும் பிரபலமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமாஹா வாகன தயாரிப்பு நிறுவனம் இயந்திரப் படகுகள், ஜெனரேட்டர்கள் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பில் உலகின் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிவருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிறுவனம் தயாரித்த ‘ஆர்.எக்ஸ்.100’ ரக மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவின் ‘செகன்ட் ஹேன்ட்’ மார்க்கெட்டில் (பழையப்பொருள் சந்தை) இன்றளவும் ஏகப்பட்ட மவுசும், கிராக்கியும் உள்ளது.

இந்நிலையில், காலப்போக்குக்கு ஏற்றவகையில் பல்வேறு நவீன அம்சங்களுடன் கூடிய இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் யமாஹா, தற்போது மோட்டார் சைக்கிளோடு சேர்த்து, அசுரவேகத்தில் அதை ஓட்டக்கூடிய புதியவகை ரோபோட்டையும் தயாரித்துள்ளது.

‘யமாஹா மோட்டோபோட்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோட்டின் அட்டகாச சவாரி, உங்கள் பார்வைக்கு வீடியோவாக..,

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply