முந்திரி பாயசம்

Loading...

முந்திரி பாயசம்
தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
முந்திரி – 25 கிராம்
பாதாம் பருப்பு – 25 கிராம்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 4
குங்குமப்பூ – சிறிதளவு
கிராம்பு – 5
பால் – 1/2 லிட்டர்
நெய் – 1 ஸ்பூன்


செய்முறை:

கடலைப் பருப்பை நன்றாக வேகவைத்து நீரை வடித்துவிட வேண்டும். வடித்த நீரை பாயசத்தில் சேர்க்கக்கூடாது. பருப்பு வாசனை தூக்கலாக இருக்கும். வடித்த நீரை வீணாக்காமல் ரசம் வைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். வெந்த பருப்பை மிக்சியில் நைசாக அரைக்கவும். முந்திரியைச் சிறிது நேரம் ஊறவைக்கவும். பாதாமை வெந்நீரில் ஊறவிட்டுத் தோலுரித்து, முந்திரி, பாதாம் இரண்டையும் விழுதாக அரைக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி அரைப்பங்காகச் சுண்டியபின் பருப்பு, முந்திரி, பாதாம் விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரைத்து, கொதித்தபின் பாலில் குங்குமப்பூ, கரைத்து விடவும். இறக்கி ஏலப்பொடி சேர்த்து நெய்யில் கிராம்பு வறுத்து கொட்டவும். இந்தப் பாயசம் சறறுக் கெட்டியாக இருக்கும். நீர்க்க தேவைப்பட்டால் பாலை அதிகம் காய்ச்ச வேண்டாம். பாதாம் எஸென்ஸ் சில துளிகள் விட்டால் வாசனையாக இருக்கும். மிகவும் சுவையானது. புரோட்டீன் நிறைந்தது, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply