முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டது பிளாக்பெர்ரி

Loading...

முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டது பிளாக்பெர்ரிஒரு காலத்தில் ஹையர் எண்ட் மொபைல் போன்களின் சந்தையில் கோலொச்சி வந்த பிளாக்பெர்ரி தற்போது உலக அளவில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது.

இந்நிலையில், மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் தனி இடம் பிடிக்க பல புதிய யுக்திகளை கையாண்டு வந்த பிளாக்பெர்ரி முதல்முறையாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் பிளாக்பெர்ரி இந்த போனில் அதிக அளவிலான புதிய வசதிகளை தந்துள்ளது. குறிப்பாக, முழுமையான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களுடன் டி,டெக் எனும் புதிய பாதுகாப்பு வசதியை வழங்கியுள்ளது.

அதாவது, எந்த அப்ளிகேசனாவது முன்னறிவிப்பின்றி டேட்டாவை அக்செஸ் செய்தாலோ அல்லது நமக்கு தெரியாமல் ஏதாவது ஒரு அப்ளிகேசன் கேமிரா, மைக்கை ஆன் செய்தாலோ உடனடியாக இந்த டிடெக் வசதி நம்மை அலர்ட் செய்துவிடும்.

நீடித்த பேட்டரி, தெளிவான கேமிரா, இரட்டை கீபோர்டு டிசைன், ஸ்லிம்மான வடிவம் என இழந்த வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

699 டாலர்களில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள இந்த போனுக்கு பிரிவ் என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply