முடி உதிர்தலைத் தடுக்கும் வெங்காயம்

Loading...

முடி உதிர்தலைத் தடுக்கும் வெங்காயம்பெண்களுக்கு அழகு தருவதில் ஒன்று கூந்தல். அத்தகைய கூந்தல் உதிர்ந்தால் பெண்களின் அழகில் ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்றும். கூந்தல் உதிர்வதற்குக் காரணம் நமது உடலில் �சல்பர்� போதுமான அளவு இல்லாததே. அந்த கூந்தல் உதிராமல் தடுக்க நாம் வெங்காயத்தைப் உபயோகிக்கலாம்.

ஏனெனில் இதில் ‘சல்பர்’ அதிகமாக உள்ளது. இதனை உண்பதால் நம் உடலில் இரத்த சுழற்சி சீரடைந்து கூந்தல் பட்டு போன்று மென்மையாக வளரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


உதிர்தலைத் தடுக்கும் வழிகள்

வெங்காய ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில் உள்ள �ஸ்கால்ப்� பகுதியில் தடவ வேண்டும். சாற்றை தடவுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், சுடு தண்ணீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.

வெங்காயம் மற்றும் தேன்: வெங்காய சாற்றுடன் சிறிது தேனை கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொண்டு தலையில் தடவிய பிறகு, சிறிது நேரம் கழித்து சாம்புவால் அலசி விடவும். இதனால் முடியானது நல்ல நறுமணத்துடன் ஆரோக்கியமாக காணப்படும்.

வெங்காயம் மற்றும் பீர்: கூந்தலானது பட்டு போல மினுமினுக்க வெங்காய சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கப் பீரை அந்த பேஸ்டுடன் கலந்து தடவிக் கொள்ளவும். இதனால் கூந்தல் பட்டு போல் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply