முகப்பருக்களை தூர விரட்ட இலகு வழிகள்

Loading...

முகப்பருக்களை தூர விரட்ட இலகு வழிகள்இன்றைய சூழ்நிலையில், நமக்கு ஏற்படும் முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்கு காரணம், நமது விதவிதமான வாழ்க்கைமுறையும், நமது பழக்கவழக்கங்களும் மற்றும் இதர பல காரணிகளும் ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமான உணவுமுறை முதலியவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை எளிதில் தவிர்த்து விடலாம். போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், பருக்கள் வராமல் தடுக்கலாம். ஹார்மோன் மாற்றங்கள் கூட முகப்பரு பிரச்சனைக்கு காரணமாகி விடுகிறது. இதற்கு தகுந்த வைத்தியம் மேற்கொள்வதோடு, கவனமாக பராமரிப்பதன் மூலமும்,பிரச்சனையை தவிர்க்கலாம். தோலில் ஏற்படும் புள்ளிகள் மற்றும் கட்டிகள் போன்றவற்றில், கரோடின் என்ற பாதி திரவ நிலையில் உள்ள புரதம் அடங்கி உள்ளது. இந்த கட்டிகள் இரண்டு வகைப்படும். முதல் நிலை கட்டிகள், பெரும்பாலும் எண்ணெய் சுரப்பிகளால் உருவாகிறது. இவை முழுமை அடையாத கட்டிகள்.
இரண்டாவது வகை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தோன்றுகின்றன. இவற்றின் மேல் அதிக வெயில் படும் போது, இவை வளர்ந்து விடுகின்றன. அதிக வீரியமுள்ள ரசாயன தயாரிப்புகளை தவிர்த்தல், மற்றும் அதிக அளவில் சூரிய வெளிச்சத்தில் செல்லாமலிருத்தல் போன்றவற்றால், முகப்பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

பொதுவாக இந்த முகப்பருக்கள் இரவு நேரங்களில் உடைந்து, காலையில் நாம் கண்ணாடியில் காணும் போது, நமக்கு பீதியை அளிக்கிறது. மார்க்கெட்டில் கிடைக்கும் பலவகையான கிரீம்களை உபயோகிப்பதன் மூலம் முகப்பருக்களை தவிர்க்கலாம். இருப்பினும் பலவிதமான இயற்கையான வீட்டு தயாரிப்புகள் மூலம் முகப்பருக்களை விரட்டியடிக்கலாம்.

பெராக்ஸைடு பென்சாயில் பெராக்ஸைடு பருக்களில் உள்ள பாக்டீரியா திரவத்தை அழிக்க வல்லது. பலவகையான செறிவுள்ள பென்சாயில் பெராக்ஸைடுகள் உள்ளன. இவற்றில் 2.5% செறிவுள்ள பென்சாயில் பெராக்ஸைடு, 5-10% அளவு திறன் கொண்ட திரவமாகும். இது நமது தோலை உறுத்தாத தன்மை கொண்டது. மேலும் பழைய இறந்த தோல் அடுக்கை உரித்து, அதே இடத்தில் புதிய தோலை ஏற்படுத்தி புத்துணர்வையும், பளிச்சென்ற தோற்றத்தையும் தர வல்லதாக விளங்குகிறது பென்சாயில் பெராக்ஸைடு.


சாலிசிலிக் அமிலம்

இதுவும் பென்சாயில் பெராக்ஸைடை போல, பருக்களில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும் வல்லமை வாய்ந்தது. தோலில் உள்ள அணுக்களில் இந்த அமிலம் பரவி, புதிய தோலின் வளர்ச்சிக்கு அடிகோலுகிறது. இந்த அமிலத்தை பருக்கள் உள்ள இடத்தில் இரவு உறங்கச் செல்லும் முன் சிறிதளவு தடவி வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம். சிறிது நேரத்திற்கு பிறகு இதை கழுவிவிட வேண்டும்.


டூத்பேஸ்ட்

மாட்டு இறைச்சியை உலரச் செய்யும் சிலிகா மற்றும் இன்னும் பல பொருட்கள் டூத்பேஸ்ட்டில் அடங்கி உள்ளன. டூத்பேஸ்ட்டை பருக்களின் மேல் தடவி வைத்தால், ஒரே இரவிலேயே பருக்கள் அளவில் சிறியதாக மாறி, உலர்ந்து நாளடைவில் குணமடையும். ஆனால் நாம் இதற்காக கண்டிப்பாக இயற்கையான டூத்பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும். சில டூத்பேஸ்ட்டில் அடங்கி உள்ள சோடியம் லாரல் சல்பேட், நமது தோலை உறுத்தும் தன்மை கொண்டது. இதனால் நாம் உபயோகிக்கும் முன், இதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். முழு இரவும் டூத்பேஸ்ட்டை கழுவாமல் விட்டு விட வேண்டும்.


தேயிலை எண்ணெய் (Tea Tree Oil)

இது பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்ட எண்ணெய். இந்த எண்ணெய் நமது முகத்துவாரத்தில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஒரு சிறிய பஞ்சில், சில துளிகள் தேயிலை எண்ணையை தெளித்து பருக்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் எண்ணையின் அளவு கூடி விட கூடாது. இது சிவப்பு நிற மற்றும் கண்ணுக்கு தெரியாத பருக்களை அழிக்கும் அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்டது.


ஆஸ்பிரின்

ஆஸ்பிரினை நொறுக்கி சிறிது நீர் சேர்த்து, பேஸ்ட் போல செய்து, சிறிய பஞ்சில் எடுத்து பருக்களின் மேல் தடவ வேண்டும். இதுவும் சிறந்த அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்தாகும்.


சுரப்பு அளவை கட்டுபடுத்தும் மருந்துகள்

இவை தோலில் பரவி பருக்களின் அளவை குறைக்கிறது. சுரப்பு அளவை கட்டுபடுத்தும் மருந்துகள், பருக்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை அழிக்கும் திறன் கொண்டது. எலுமிச்சை சாறு, வாழைப்பழத் தோல், கிரீன் டீ மற்றும் விட்ச் ஹாசில் செடி போன்றவை சுரப்பு அளவை கட்டுப்படுத்தும் இயற்கையான மருந்துகள். அதிலும் எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், முகப்பருவை அழித்து, முகத்திற்கு நல்ல பளபளப்பை தருகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply