முகத்திற்கு எந்த கிரீம் போட்டாலும் சரிவரவில்லையா அப்ப இந்த முறையில் ட்ரை பண்ணுங்க

Loading...

முகத்திற்கு எந்த கிரீம் போட்டாலும் சரிவரவில்லையா அப்ப இந்த முறையில் ட்ரை பண்ணுங்க* காலையில் முகத்தை வெதுவெதுப்பான மற்றும் மிதமான பேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும். இதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் வெதுவெதுப்பான நீரை வைத்து முகத்தை ஈரப்படுத்திய பின், உள்ளங்கையில் பேஸ் வாஷ் ஊற்றி அதை முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். முறையாக சுத்தம் செய்த பின், வெதுவெதுப்பான நீர் வைத்து கழுவ வேண்டும்.

* அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப, பேஸ் வாஷ் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம். உதாரணமாக, எண்ணெய் வகை சருமத்தினர், எண்ணெய் கலக்காத பேஸ் வாஷையும், வறண்ட சருமத்தினர் ஆல்கஹால் கலக்காத பேஸ் வாஷையும் பயன்படுத்தலாம்.

* குளிப்பதற்கு முன், உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதன் பின், குளிக்கும் போது, மிதமான பாடி வாஷை பயன்படுத்தலாம்.

* சருமத்தை சுத்தம் செய்த பின், சன்ஸ்கிரீன் தேய்க்க வேண்டும். வெளியில் செல்லாத போதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சன்ஸ்கிரீன்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது.

* பகல் 11 மணியளவில் மாய்சரைசர் தடவலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலந்த மாய்சரைசர் பயன்படுத்தலாம். இத்தகைய மாய்சரைசர்கள், மாசு, சூரிய ஒளி மற்றும் புகை ஆகியவற்றால் சருமம் சேதமடைவதில் இருந்து காக்கிறது.

* தோலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு சத்து கிடைக்க, பாதாம் மற்றும் அக்குரோட் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

* மதிய வேளைகளில் வெளியில் செல்வதாக இருந்தால், மீண்டும் சன்ஸ்கிரீன் போட்ட பின் செல்வது நல்லது.

* வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புபவர்கள், வீட்டிற்கு வந்ததும், பேஸ் வாஷ் மற்றும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தோல் வறண்டு இருப்பதாக உணர்பவர்கள், லைட்டான மாய்சரைசர் அப்ளை செய்யலாம்.

* இரவு நேரத்தில், வைட்டமின் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தினால், அவை முகச்சுருக்கம் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கும். எனினும், இத்தகைய கிரீம்களை தோல் நிபுணர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்துவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply