மீண்டும் சந்தையில் NOKIA

Loading...

மீண்டும் சந்தையில் NOKIAஸ்மார்ட் போன்களின் வருகை காரணமாக கைத்தொலைபேசி விற்பனையிலிருந்து வெளியேறிய நொக்கியா (NOKIA)மீண்டும் தனது வருகையை அறிவித்துள்ளது. விரைவில் நொக்கியா தொலைபேசிகள் பாவனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நொக்கியா நிறுவனம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்திடம் தமது வியாபாரத்தை கையளித்த பின்னர் தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தது.

எனினும் மைக்ரோஸொப்ட்டுடனான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டிலேயே நிறைவு பெறுவதன் காரணமாக அதன் பின்னரே நொக்கியா நிறுவனத்தின் மீள் வருகையானது இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் நொக்கியா நிறுவனம் அன்ட்ரோய்ட் டப்லட் மற்றும் புதிய கமரா வகைகளை சந்தைக்கு அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அன்ட்ரோய்ட் அப்ளிகேஷன்களையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நொக்கியா நிறுவனத்தினால் வேலைவாய்ப்புக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply