மிருதுவாக நீளமான கூந்தல் கிடைக்க வேண்டுமா இதைப் படிங்க

Loading...

மிருதுவாக நீளமான கூந்தல் கிடைக்க வேண்டுமா இதைப் படிங்கநீளமான கூந்தல் எந்த வித பாதிப்பும் இல்லாம, பட்டுபோல் மின்னியபடி இருந்தா, அதை எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும். நமக்கு இது மாதிரி கூந்தல் கிடைக்காதா என ஒரு நொடியாவது யோசிப்போம். அப்படிப்பட்ட கூந்தல் கிடைக்கனுமா?
உங்களுக்கு அப்படிப்பட்ட கூந்தல் கிடைக்க இங்கே குறிப்பிட்டிருக்கிற குறிப்புகள் உபயோகமாக இருக்கலாம்.
ஏனெனில் இங்கே சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொன்றுமே கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும். பொடுகினை விரட்டும் . கூந்தலுக்கு ஊட்டம் அளித்து, அடர்த்தியாக வளரச் செய்யும்.
அப்படி எந்த மாதிரியான குறிப்புகள் அவை என்று தெரிந்து கொள்ள விருப்பமா? வாருங்கள் பார்க்கலாம்.


எலுமிச்சை சாறு+ தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் எலுமிச்சை சாறோடு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து, இந்த கலவையை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழிந்த பின் முடியை நல்ல தரமான ஷாம்பு கொண்டு அலசவும்.


வெள்ளைக் கரு + ஆலிவ் எண்ணெய்

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து, இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து , தலையை அலசவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply