மின்கலம் தற்போது தாவரப் பசையில் உருவாக்கப்படுகிறது

Loading...

மின்கலம் தற்போது தாவரப் பசையில் உருவாக்கப்படுகிறதுதாவரங்களில் உள்ள கூழ் தன்மையான பசையினைப் பயன்படுத்தி அதிநவீன மின்கலத்தினை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இம் மின்கலமானது கூடிய அளவு மின்சக்தியினை சேமித்து வைக்கக்கூடியதாக இருப்பதுடன் மென்மையானதாகவும், பாரம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது. இது தவிர மீள்தன்மை (Elastic), வலிமை மிகுந்ததாகவும் இருக்கின்றது.

இவை மீள் தன்மையைக் கொண்டிருப்பதனால் ஆடைகள் மற்றும் வாகனங்களில் எந்தவொரு பகுதியிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணியக்கூடிய இலத்திரனியல் சாதனங்களை உருவாக்கக்கூடியதாக இருத்தல், மொபைல் சாதனங்களை எந்தவொரு இடத்திலும் சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply