மிக்ஸ்ட் ஆம்ப்லெட்

Loading...

மிக்ஸ்ட் ஆம்ப்லெட்

தேவைப்படும் பொருட்கள் :

1. குட மிளகாய் – 1
2. முட்டை – 3
3. பச்சைப் பட்டாணி – 2 மேஜைக்கரண்டி
4. வெங்காயம் – 2 (சிறியது)
5. உப்பு – 1/2 தேக்கரண்டி
6. சோயா ஸாஸ் – 1/2 தேக்கரண்டி
7. ஷெர்ரி – 1/2 தேக்கரண்டி
8. சர்க்கரை – 1 சிட்டிகை
9. கொத்துக் கறி – 125 கிராம்
10. சமையல் எண்ணெய் – 50 மி.லி.முன்னேற்பாடு – 1

1. குட மிளகாய்களைக் கழுவவும்
2. அதை வெட்டவும்
3. உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விடவும்முன்னேற்பாடு – 2

1. ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை எடுக்கவும்
2. அதை அடுப்பில் போடவும்
3. நன்றாகக் கொதிக்க விடவும்
4. கொதித்த நீரில் இந்த வெட்டப்பட்ட மிளகாய்களைப் போடவும்
5. ஐந்து நிமிடம் வைத்திருந்து எடுத்துத் தனியே வைத்து விடவும்முன்னேற்பாடு – 3

1. முட்டைகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்
2. நுரை பொங்க அதை அடித்துக் கொள்ளவும்முன்னேற்பாடு – 4

1. பச்சைப் பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. சிறிதளவு நீர் விடவும்
3. இதனை நன்றாக ஊற விடவும்
4. ஊறிய பின்னர், அதை அப்படியே எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.முன்னேற்பாடு – 5

1. கொத்துக் கறியை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்
2. ஈரமில்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்முன்னேற்பாடு – 6

1. முட்டைக் கலவையில் வேக வைக்கப்பட்ட பட்டாணியைப் போடவும்
2. அதில் வெட்டப்பட்டுள்ள மிளகாயைக் கொட்டவும்
3. பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைக் கலந்து கொள்ளவும்
4. இந்த வெங்காயமானது வாங்கியவுடனே நன்றாகக் கழுவப்பட்டிருக்க வேண்டும்
5. தோல் நீக்கப்பட்டிருக்க வேண்டும்
6. இதில் உப்பைச் சேர்க்கவும்
7. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்தயாரிப்பு முறை :

1. ஒரு வாணலியினை எடுத்து அடுப்பின் மேல் போடவும்
2. கல்லைக் காய வைத்துக் கொள்ளவும்
3. கல் காய்ந்தவுடன், எண்ணெயை அதில் ஊற்றவும்
4. எண்ணெய் சூடேறியவுடன், நன்றாகப் பிழிந்து வைத்திருக்கும் கறியை எடுத்து அதில் போட்டுப் பொன்நிறமாக வரும் வரை வதக்கவும்
5. இதனை முட்டைக் கலவையில் சேர்த்துக் கொள்ளவும்
6. நன்றாகக் கலந்து கொள்ளவும்
7. பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் போட்டு இந்தக் கலவையை ஆம்ப்லெட் போலப் போட்டுக் கொள்ளவும்.
8. இந்த ஆம்ப்லெட்டின் மேலே சோயா ஸாஸைத் தடவவும்
9. செர்ரியைத் தூவவும்
10. சர்க்கரையையும் தூவிக் கொள்ளவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply