மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டை

Loading...

மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டைதினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. முட்டையானது அதிக சத்து நிறைந்த உணவு, இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை, தினசரி இரண்டு முட்டை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வருவதற்காக வாய்ப்புகள் 24 சதவீதம் குறையும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய்.

முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய அச்சமின்றி வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இது தொடர்பாக 3 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நமது உடலில் உள்ள செல்கள் சரியாக வேலை செய்வதற்கு சோலைன் என்ற புரதம் தேவைப்படுகிறது. ஒரு முட்டையில் 125.5 மில்லி கிராம் சோலைன் உள்ளது. ஆண்கள், பெண்கள், வயது என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் அனைவருக்குமே இந்த சோலைன் தேவைப்படுகிறது.

முக்கியமாக பெண்களுக்கு தாய்மை அடையும் பருவத்தில் இது அதிகமாக தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு நமக்கு 455 மில்லி கிராம் சோலைன் தேவைப்படுவதாகவும், காபி, முட்டை, பால் ஆகியவற்றை உட்கொள்ளும் போது இவை உற்பத்தியாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலில் இந்த சோலைன் குறையும் போது, மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. முட்டை உட்கொள்ளும் போது சோலைன் சுரப்பதால் மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply