மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்

Loading...

மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்வேர்செல்களை உபயோகித்து உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

வளரும் கருவிலிருந்து வேர்செல்களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி குழந்தை பிரசவித்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து வேர்செல்களைப் பிரித்தெடுப்பதே.

ஆனால் அதை சர்வசாதாரணமாக பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கிலிருந்து கூட வேர்ச்செல்களைப் பெறமுடியும்.

இரத்தத்தில் காணப்படும் வேர் செல்களை ஸ்ட்ரோமல்-ஸ்டெம் செல் என்பார்கள்.

கருவிலிருந்து பெற்ற வேர்செல்களிலிருந்து சகலவிதமான திசுக்களையும் அடையலாம்.

இயலாவிட்டாலும் அடிபோஜெனிக், காண்ட்ரோஜெனிக், ஆஸ்டியோஜெனிக், அதாவது கொழுப்புத்திசு, இணைப்புத்திசு, எலும்புத்திசு, உட்தோல் திசுக்களில் இதயத்திசு மற்றும் நரம்பு செல்களை அதிலிருந்து பெறமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இனி செய்யப்போகும் வேர்செல் சிகிச்சைகளுக்கு பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும்.

எதை தீட்டென்றும் அசூசை என்றும் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது இன்று

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply