மாணவா்களின் கல்வியை பாதிக்கின்றனவா சமூகவலைத்தளங்கள்

Loading...

மாணவா்களின் கல்வியை பாதிக்கின்றனவா சமூகவலைத்தளங்கள்சமகாலத்தில் வீடியோ ஹேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவற்றில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் உள்ளடங்குகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பரீட்சைகளில் குறைந்த புள்ளி பெறுவதற்கு காரணமாக அமைவது சமூகவலைத்தளங்களா? அல்லது வீடியோ ஹேம்களா? என்ற ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சமூகவலைத்தளங்களை விடவும், வீடியோ ஹேம்களே அதிகளவில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்விற்காக 14 தொடக்கம் 16 வயது உடையவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் நாளாந்தம் இணையத்தளத்தினை பயன்படுத்தும் 81 சதவீதமானவர்களின் பரீட்சைப் புள்ளிகளில் பாதிப்பு இல்லை எனவும், எஞ்சிய 19 சதவீதமான வீடியோ ஹேம் விளையாடுபவர்களின் பரீட்சைப் புள்ளிகளில் பாரிய வீழ்ச்சி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply