மனப்பதட்டத்தை போக்குவது எப்படி

Loading...

மனப்பதட்டத்தை போக்குவது எப்படிதற்போதைய காலகட்டம் கம்ப்யூட்டர் காலமாக மாறிவருகிறது. எங்கு பார்த்தாலும் பதட்டமான சூழ்நிலை தான் இதனால் மக்களிடையே மனப்பதட்டம் என்பது அதிகரித்து வருகின்றது. இயற்கையான சூழ் நிலைகளில் யாரும் வளர்வது கிடையாது.
முற்றிலும் மாறுபட்ட அதாவது ஒரு செயற்கைத்தனமான உறவுகளிலும், சுற்றுபுறத்திலும் வாழ்வது வேலை அழுத்தம், பொருளாதார நிலைமை ஆகியவற்றுடன் போட்டி போட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக மனப்பதட்டத்தினால் மனதில் நிம்மதியின்மை மற்றும் ஏதாவது இழந்தது போன்ற சூழ் நிலைக்கு ஆளாக்கப்படுகிரார்கள்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடக்காமல் வெளியே வந்து மனிதர்களோடும், இயற்கையான பசுமையான காட்சிகளையும் வெயிலையும் மழையையும் ரசித்தால் தான் ,மன இறுக்கம் குறையும்.
மனதிற்கும் உணவிற்கும், நெருங்கிய தொடர்புண்டு. மசாலா நிறைந்த காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு கோபம் இயற்கையாகவே அதிகமாக வருவதுண்டு. அதேபோல் காரமற்ற உணவுகள் மனதை சாந்தமாகவே வைத்திருக்கும்.
அசைவ உணவையும், சிலர் வெங்காயம், போன்ற காரமான உணவு பொருளையும் தவிர்ப்பதற்கு காரணம் அமைதியான மனதை பெறுவதற்காக தான். இதுபோல் நல்ல உணர்வுகளைத் தரும் உணவுகளை கொஞ்சம் கவனிப்போம்.

முழு தானியங்கள்

முழு தானியங்களில் மெக்னீசியம் அதிக அளவு உள்ளது. இவை நரம்புகளை சாந்தப்படுத்துகிறது. அதேபோல் அவைகளிலிருக்கும். ட்ரிப்டோஃபேன் மனதை அமைதிப்படுத்தும் காரணியாகும்.

கடற்பாசி

கடற்பாசியிலும் மெக்னீசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் அதிகமாக உள்ளது. மேலும் முழுதானியங்களான கோதுமை போன்றவை சிலருக்கு அலர்ஜியை தரும். அதில் குளுடன் அதிகமாக இருப்பதால் அலர்ஜி உண்டாகும்.
அவ்வாறு பிரச்சனை இருப்பவர்கள் கடற்பாசியை உண்டால், மிகவும் நல்லது.

பாதாம்

ஜிங்க் மற்றும் இரும்பு சத்து பாதாமில் அதிகமாக உள்ளது. இவை மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும்.

சொக்லேட்

சொக்லேட்டில் மன அழுதத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசாலை சம நிலை படுத்தும் தன்மை இருக்கிறது. இவை மன அழுத்தம் குறைகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply