மனதை வருத்தும் முகப்பருவை நீக்க எளிய வழிகள்

Loading...

மனதை வருத்தும் முகப்பருவை நீக்க எளிய வழிகள்முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். அதிலும் வலியின் போது முகப்பருவை அடிக்கடி தொடுவதால், அப்போது முகப்பரு வெடித்து பரவ ஆரம்பிக்கிறது. மேலும் சிலர் பருவை கை விரலால் கிள்ளவும் செய்கின்றனர். அம்மாதிரி செய்வது கூடாது.
முகப்பரு வரக் காரணம் என்ன என்று பார்ப்போமா?

பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Hormone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன.

பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அளவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன.

சில சமயங்களில் பக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன. சிலருக்கு பித்த நீர் அதிகம் சுரப்பதாலும் தீராத பருக்கள் வரக்கூடும்.

ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது. அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட என்ன வழிமுறைகள் என்று தெரிந்துக கொள்வோமா?

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.
கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட இது சிறந்த மருந்தாகும்.
வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்.
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெயை தொடர்ச்ச்யியாக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவாவதை தடுக்கும்.
சிறிதளவு தயிருடன், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவையும் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் மிகுந்த பளபளப்பாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply