மட்டன் கொத்துகறி அடை

Loading...

மட்டன் கொத்துகறி அடை

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) – 200 கிராம்
சோம்பு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
காய்ந்த மிளகாய் – 20 கிராம்
தேங்காய் – 50 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
சின்னவெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 20 கிராம்
கொத்தமல்லித்தழை – 20 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புழுங்கலரிசியை தனியாகவும், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து இறக்கவும்.
* புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கடைசியாக மட்டன் கொத்துகறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்னவெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
* சூப்பரான மட்டன் அடை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply