மக்காச்சோள பால்கூட்டு

Loading...

மக்காச்சோள பால்கூட்டு

தேவையான பொருட்கள்:-

மக்காச் சோளம் – 250 கிராம்
பால் – 450 மில்லி
எண்ணெய் – 20 மில்லி
சீரகம் – 5 கிராம்
இஞ்சி – 10 கிராம்
மிளகாய்த் தூள் – 10 கிராம்
கொத்துமல்லி – 10 கிராம்
தேங்காய் விழுது – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்பசெய்முறை:-

சோளத்தை பாலுடன் சேர்த்து கொதிவராமல் வேக வைக்கவும். பாலின் அளவு மிக குறையும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு தாளிக்கவும். மிளகாய் தூளையும் போடவும். இதனுடன் வேக வைத்த சோளத்தை எஞ்சி இருக்கும் பாலுடன் சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கிளறி தேங்காய் விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பின் தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். இதனை பிரட்டுடன் சேர்த்து சாண்ட்விச்சாக சாப்பிட சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply