ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி

Loading...

ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி – 1 கப்
வெங்காயம் – 2
பூண்டு – 10 பற்கள்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சோள மாவு – அரை ஸ்பூன்


செய்முறை :

* வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிய பின் ப்ரோக்கோலி போட்டு வதக்கவும்.
* பிறகு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.
* சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply