ப்ரைட் க்ரிக்ட் பிஷ் வித் லெமன்ஸ்

Loading...

ப்ரைட் க்ரிக்ட் பிஷ் வித் லெமன்ஸ்
தேவையான பொருட்கள் :

வினிகர் – 4 மேஜைக் கரண்டி
ஸோயா ஸாஸ் – 3 மேஜைக் கரண்டி
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு
மீன் – 6 பெரியது
சமையல் எண்ணெய் – 200 மி.லி
மைதா மாவு – 2 மேஜைக் கரண்டி
எலுமிச்சம் பழம் – 2
மிளகு – 1 தேக்கரண்டி


முன்னேற்பாடு – 1

மீன்களை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்
சுத்தம் செய்து கொள்ளவும்
வாலும், தலையும் இல்லாமல் பதினாறு துண்டுப் பகுதிகளாகப் போட்டுக் கொள்ளவும்
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்


முன்னேற்பாடு – 2

இஞ்சியைக் கழுவவும்
மேல் தோலைக் கத்தியால் சுரண்டவும்
அதை அம்மியில் வைத்துச் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


முன்னேற்பாடு – 3

பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீன் துண்டங்களின் மீது வினிகர் ஊற்றவும்
சோயா ஸாஸைக் கலந்து கொள்ளவும்
இஞ்சி விழுதைப் போடவும்
ருசிக்கு ஏற்ற உப்பைப் போடவும்
எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்


முன்னேற்பாடு – 4

மிளகை அம்மியில் வைத்துப் பொடி செய்து கொள்ளவும்
இதை மைதா மாவில் கலந்து கொள்ளவும்
சிறிதளவு உப்புத் தூளையும் போட்டுக் கொள்ளவும்
சிறிதளவு தண்ணீர் விட்ட அதைக் கெட்டியாகக் குழைத்துக் கொள்ளவும்


முன்னேற்பாடு – 5

இப்போது தயார் நிலையில் உள்ள மீனை, மைதா மாவில் நன்றாகப் புரட்டிக் கொள்ளவும்
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சமையல் எண்ணெய் விடவும்
நன்கு காய விடவும். அதில் இந்த மீன் துண்டுகளைப் போட்டு நன்றாகப் பொரித்து எடுத்துத் தட்டில் வைத்துக் கொள்ளவும்


தயாரிப்பு முறை :

இந்த மீன் துண்டுகளை இப்போது ஓவனில் அடுக்கி வைக்கவும். 400 டிகிரி உஷ்ணத்துக்கு ஓவனில் உஷ்ணத்தை வைத்து விடவும். சரியாகப் பத்து நிமிடம் வரையில் இவ்வாறு வைத்திருக்கவும். அதன் பின் ஓவனை விட்டு வெளியே எடுத்து விடவும். இந்த மீன் மொர, மொரப்பாக இருக்கும்
தட்டில் வைத்துப் பரிமாறும் வேளையில், அதில் எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு பிழிந்து தரவும். சுவையானது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply