போன் தண்ணில விழுந்துடுச்சா முதலில் இத செய்யுங்க

Loading...

போன் தண்ணில விழுந்துடுச்சா முதலில் இத செய்யுங்கஇது அனைவருக்கும் நடக்கும் சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. எந்நேரமும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டதா, உடனே கவலை கொள்ளாமல் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

தப்பி தவறி போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.ஸிவ்ட்ச் ஆஃப்

போனினை தண்ணீரில் இருந்து எடுத்து முதலில் அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.அகற்றுதல்

போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின் போனில் இருக்கும் பாகங்களை கழற்ற வேண்டும்.குலுக்குதல்

மெதுவாக போனை குலுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் வெளியேற வாய்ப்புகள் இருக்கின்றது.அரிசி

அடுத்து போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம்.நேரம்

அரிசியில் போனினை குறைந்தது 24 இல் இருந்து 48 மணி நேரம் வரை வைக்கலாம். இடையில் போனினை எக்காரணத்தை கொண்டும் எடுத்து பார்க்க கூடாது.வாரண்டி

அடுத்து போனினை அரிசியில் இருந்து எடுத்த பின் வேலை செய்கின்றதா என்பதை பார்க்கலாம், வேலை செய்யாத பட்சத்தில் அதனை சர்வீஸ் சென்டருக்கு தான் எடுத்து செல்ல வேண்டும், தண்ணீரில் விழுந்த போன் வாரண்டியில் சரி செய்து தரப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.பவுச்

மழை காலங்களிலும் மற்றும் நீச்சல் குளம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது போனிற்கு பவுச்களை பயன்படுத்தலாம். இது போனை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.இன்சூரன்ஸ்

போனிற்கு சாதாரண வாரண்டியை தவிர்த்து தண்ணீரில் விழுந்தாலும் அதனை வாரண்டியில் சரி செய்து கொள்ள ஏதுவாக மற்ற வாரண்டிகளை எடுத்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply