பேஸ்புக்கில் லைக்ஸ் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறிய புதிய மென்பொருள்

Loading...

பேஸ்புக்கில் லைக்ஸ் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறிய புதிய மென்பொருள்இன்றைய இளைஞர்களின், இணைய காதலி ‘பேஸ்புக்’ என்று சொல்லப்படும் சமூக ஊடகம் தான், பலரும் இதனிடம் சரணடைந்து இருக்கிறார்கள்.

இந்த பேஸ்புக்கில் ஒருவரின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் குணாதிசயங்களை சொல்லிவிடலாம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மென்பொருளுக்குள் பேஸ்புக் முகவரியோடு நுழைந்தோம் என்றால் நம்மைப் பற்றி அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிடும்.

நம்மைப் பற்றிய இந்த தகவல்களை நாம் கொடுத்து இருக்கும் ‘லைக்ஸ்‘ அடிப்படையில் நிர்ணயிக்கிறது. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் நம் மனதை பாதிக்கும் விடயங்களுக்கு தான் நாம் விருப்பம் தெரிவிக்கிறோம். நமக்கு பிடிக்காத விடயங்களை கடந்து போய்விடுகிறோம்.

அப்படி நமக்கு பிடித்தவற்றுக்கு நாம் கொடுத்த லைக்குகளை வைத்து நம்மைப் பற்றி சொல்கிறார்கள். இந்த மென்பொருளில் முதலில் சொல்வது நமது வயதைத்தான்.

வயது என்றால் உண்மையான வயதல்ல. நீங்கள் கொடுத்து இருக்கும் லைக்குகளை வைத்து உங்களின் மனதின் வயதை கணக்கிடுகிறது. நீங்கள் மன அளவில் இளைஞராக இருக்கிறீர்களா என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து பால், நீங்கள் ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம். ஆனால் மனதில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றும் அதன் சதவீதம் எவ்வளவு என்றும் சொல்லி விடுகிறது. அடுத்ததாக நமது ஆளுமைத் திறன் பற்றி தெரிவிக்கும்.

இதற்காக 260,000 பேரிடம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதற்கடுத்து உங்களின் புத்திசாலித்தனத்தை சொல்கிறார்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா அதன் சதவீதம் எவ்வளவு என்று சொல்லி இருக்கிறார்கள்.

நாம் லைக் செய்தவர்களில் எத்தனை பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதையும் இந்த மென்பொருள் சொல்கிறது. பொதுவாக ஆண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால் அதில் 7 பேர் ஹோமோ செக்சுவல் என்றும், பெண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால் அதில் 5 பேர் லெஸ்பியன்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. உங்கள் லைகுகளில் எத்தனை பேர் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

அதன்பின் அரசியல் மற்றும் மதம் சார்ந்த விடயங்களில் நாம் எப்படி? கல்வி மற்றும் உறவு நிலைகளில் நமது மனம் எப்படி இருக்கிறது என்ற எல்லா விபரங்களையும் விளக்கமாக சொல்கிறார்கள்

Loading...
Rates : 0
VTST BN