பேஸ்புக்கில் நீங்கள் அறிந்திராத நிதர்சனம்

Loading...

பேஸ்புக்கில் நீங்கள் அறிந்திராத நிதர்சனம்பேஸ்புக் எனும் சமூக வலைதளம் உலகம் முழுவதிலும் பிரபலமாக இருப்பதோடு பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தாலும் இன்றும் இதன் சேவை இலவசமாகவே வழங்கப்படுகின்றது.

பிரபலமான சமூக வலைதளம் என்பதை தவிற உங்களுக்கு பேஸ்புக் குறித்து என்ன தெரியும். இங்கு உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் பேஸ்புக் தகவல்களை தான் தொகுத்திருக்கின்றோம்.


பேஸ்புக் :

பேஸ்புக் பயன்படுத்தும் 70% இளம் பருவத்தினர் தங்களது பெற்றோருடன் நண்பர்களாக இருக்கின்றார்கள்.


தீங்கு :

பேஸ்புக் பயன்படுத்தும் 66% இளம் பெண்கள் தவறான நண்பர்களால் ஏமாற்றப்படுவதோடு இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர்.


போஸ்ட் :

தினசரி பேஸ்புக் போஸ்ட்களின் எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது.


பணியாளர்கள் :

அமெரிக்காவில் 19.4% பேர் பணியாற்றும் இடங்களில் பேஸ்புக் பயன்படுத்த முடியாது, இருந்தும் 30% அமெரிக்கர்கள் பணியாற்றும் இடங்களில் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.


சிம்ப்சன்ஸ் :

பேஸ்புக்கில் அதிகம் பேர் விருப்பம் தெரிவித்திருக்கும் தொலைகாட்சி தொடர்களில் சிம்ப்சன்ஸ் 69.6 மில்லியன் விருப்பங்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது.


இசை :

100 மில்லியன் ரசிகர்களின் ஆதரவோடு ஷகிரா பேஸ்புக்கில் பிரபலமான பாடகியாக இருக்கின்றார். இவரை தொடர்ந்து எமினம் மற்றும் ரிஹானா முறையே 91 மில்லியன் மற்றும் 81 மில்லியன் ரசிகர்களோடு இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்கள்.


பயன்பாடு :

பேஸ்புக் பயன்படுத்துவதில் கனடா நாட்டினர் முதலிடம் வகிக்கின்றனர். கனடாவில் 157 மில்லியனுக்கும் அதிகமானோர் தினமும் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.


ஆசியா :

ஆசியாவில் 253 மில்லியனுக்கும் அதிகமானோர் தினமும் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இதில் சீனாவில் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply