பேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்

Loading...

பேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள் போன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி விடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்..!

இப்படி நிறைய பிரச்சனைகள் உள்ளது என்பதற்காக, ஒட்டுமொத்தமாக ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்துவிடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது. அதைப்பற்றிய சில நுணுக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள் :


1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)

பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்..! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது.

ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நல்லது. மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது.


2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)

இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த தேதி தான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியின் மூலம், உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும். எனவே வெறும் தேதி மட்டும் மாதத்தை பயன்படுத்துவது சிறந்தது.


3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)

உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends), நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.

இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மற்றும் குடும்ப விவரங்கள், இது அனைத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். முக்கியமாக, உங்க தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்குமாறு வைப்பதை தவிர்க்கலாம்.


4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption)

உங்கள் குழந்தைகளின் பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்கள் குழந்தைகளின் பெயரை பயன்படுத்தியிருந்தால், Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கவும்.


5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home)

அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” என்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்க்கவும். அது வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தாக முடியும்.


6. கூகுள் போன்ற தேடல் இயந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)

பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடு இயந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)


7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised)

இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான். அதாவது, ஃபேஸ்புக்கை13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்கள் குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்.

“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை என்கிறார் சார்லஸ். இதில் இருக்கும் ஆபத்து உங்களுக்கே தெரியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply