பேரீச்சம் பழ வால்நட் கேக்

Loading...

பேரீச்சம் பழ - வால்நட் கேக்மைதா மாவு – 500 கிராம்
சக்கரை பவுடர் – 500 கிராம்
பேரீச்சம் பழம் – 1 கிலோ
வெண்ணெய் – 400 கிராம்
வால்நட் – 250 கிராம்
தண்ணீர் – 250 கிராம்
முட்டை – 8
பேக்கிங்பவுடர் – 1 தேக்கரண்டி
ஆப்பசோடா – 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டிசெய்முறை:

பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, ஆப்பசோடா பவுடர் கலக்கிய நீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை உலர வைக்க வேண்டும். இத்துடன் வால்நட் துண்டுகள், சலித்தெடுத்த மைதா மாவு – பேக்கிங் பவுடர் சேர்த்து கலவை செய்யவும். வெண்ணெயுடன் சக்கரைப் பொடியை சேர்த்து நுரைக்க அடிக்கவும், பிறகு அத்துடன் முட்டையையும், வெனிலா எசன்ஸீம் சேர்த்து நுரைக்க அடிக்கவும். இத்துடன் பேரீச்சம் பழம் கலவையையும் வெண்ணெயையும் கலந்து இட்லி மாவைப் போல கலந்து கொள்ளவும். ட்ரேயில் டால்டாவோ, வெண்ணெயோ, தடவி, அதில் கலவையை ஊற்றி அடுப்பில் ஏற்றவும். ஒரு மணி நேரம் வெந்தபின் இறக்கி ஆறவிட வேண்டும். கேக் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply