பேன் தொல்லையை ஒழிக்கனுமா

Loading...

பேன் தொல்லையை ஒழிக்கனுமாதுளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.

மருதாணிப் பூவை இரவில் தலையில் வைத்துக் கொண்டால் பேன்களின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

பேன் தொல்லை இருந்தால் வசம்பை அரைத்து, விழுதைக் கொண்டு தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும்,

சிறிதளவு வினிகரை இரவில் தலையில் தடவி துணியால் சுற்றிக் கட்டி காலையில் தலைக்கு குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன் தொல்லைகள் நீங்கும்.

சீதாப்பழக் கொட்டையை இரண்டு நாள் நன்கு காய வைத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து இரவில் தலைக்கு தடவி காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்.

வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

காட்டு சீரகத்தை பாலில் ஊற வைத்து அரைத்து (அ) தனியாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து இரவில் தலையில் பரவலாக தேய்த்து விட வேண்டும். காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply