பெண்களில் முகத்தில் உள்ள முடிகளை போக்க

Loading...

பெண்களில் முகத்தில் உள்ள முடிகளை போக்கபெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும் அவை வளர்ந்து முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது.

இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல.


மஞ்சள் மற்றும் கடலை மாவு:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும்.

குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.


மஞ்சள் மற்றும் உப்பு:

ஸ்கரப் செய்வதற்கு உப்பு மற்றொரு சிறந்த அழகுப் பொருள். இதனை வைத்து ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து அதன் வளர்ச்சி தடைபடும்.

அதற்கு மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்.

இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் இயற்கையாக நீங்கிவிடும்.


எலுமிச்சை மற்றும் தேன்:

இந்த ஸ்கரப்பை செய்தால் முகம் நன்கு வெள்ளையாவதோடு முடியில்லாத பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

இந்த முறைக்கு எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


சர்க்கரை ஸ்கரப்:

இந்த ஸ்கரப்பில் முகத்தை கழுவி பின் சர்க்கரையை கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை போக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply