பூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ரோபோ

Loading...

பூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ரோபோGerridae எனும் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியதும், நீரில் துள்ளிப் பாயக்கூடியதுமான பூச்சி இனத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டள்ளது.

இதனை தென் கொரியாவிலுள்ள Seoul தேசிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோ உருவாக்கத்தின்போது பல பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல வழுக்களும் ஏற்பட்டிருந்தன. எனினும் கடுமையான முயற்சியின் பின்னர் நீர் மேற்பரப்பில் துள்ளிப் பாயக்கூடிய வகையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இதேவேளை குறித்த ரோபோ தனது எடையைப் போன்று 16 மடங்கு எடையை சுமந்துகொண்டு நீர் மேற்பரப்பில் துள்ளிக் குதிக்கும் அளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply