புற்று நோய்க்கு மருந்தாகும் கச்சான்

Loading...

புற்று நோய்க்கு மருந்தாகும் கச்சான்மனிதர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் எண்ணெய் வித்துகளில் ஒன்று வேர்க்கடலை. நிலக்கடலை என்று வழக்கு மொழிகளில் அழைக்கப்படும் இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொண்டது. நிலக்கடலையில் உள்ள சத்துக்களை பார்க்கலாம்…

* நிலக்கடலை அதிக ஆற்றல் தரக்கூடியது. ஏராளமான தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளன.

* ஆலிக் ஆசிட் எனப்படும் கொழுப்பு அமிலம் நிலக்கடலையில் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதயம் சார்ந்த கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

* எளிதில் ஜீரணம் ஆகும் புரதச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும், உடற்செயல்களுக்கும் அவசியமானதாகும்.

* பி-கோமாரிக் அமிலம் எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் நிலக்கடலைப் பருப்பில் காணப்படுகிறது. இரப்பை புற்றுநோக்குக் காரணமான படிவுகள் இரப்பையில் உருவாகாமல் தடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது.

* நிலக்கடலைப் பருப்பில் உள்ள மற்றொரு முக்கியமான நோய் எதிர்ப்பு பொருள் ரிசவரட்ரோல். இது புற்றுநோய்களுக்கு எதிர்ப்பாற்றலை வழங்க வல்லது. மேலும் இதய பாதிப்புகள், நரம்பு வியாதிகள், நினைவிழப்பு வியாதிகள் ஆகியவை ஏற்படாமல் காக்கும். வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

* கொதிக்க வைத்து சாப்பிடும் நிலக்கடலைப் பருப்பு கூடுதல் நோய் எதிர்ப்புத் தன்மையை உடலுக்கு வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

* ‘வைட்டமின் ஈ’ நிலக்கடலைப் பருப்பில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பருப்பில் 8 கிராம் ‘வைட்டமின் ஈ’ கிடைக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படும். உடற்செல்களின் சவ்வு வலுப்பெற இது அவசியம்.

* பி- குழும வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயமின், பான்டோதெனிக் அமிலம், போலேட் ஆகியவை உள்ளன. 100 கிராம் நிலக்கட லையில் 85 சதவீதம் ஆர்.டி.ஐ. அளவில் நியாசின் உள்ளது. இது மூளை நலமாக செயல்பட அவசியமான வைட்டமின் ஆகும்.

* தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் வேர்க் கடலைப் பருப்பில் உள்ளன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply