புரொட்டீன் தால்

Loading...

புரொட்டீன் தால்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/4 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
உளுத்தம்பருப்பு – 1/4 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
காராமணி – 1/4 கப்
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 4
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சிரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
சிரகம் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவுசெய்முறை:

காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய காராமணியுடன் பருப்புகளை சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்து, அதில் சிரகம் தாளித்து பச்சைமிளகாய், பூண்டை சேர்க்கவும். பிறகு, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, வேகவைத்த, பருப்பு, மிளகுத்தூள், சிரகத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இதை பிரட், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு. பருப்புகளை தோலுடன் சேர்த்தால் புரதச்சத்துடன் நார்ச்சத்தும் கிடைத்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply