புதிய கருவிகளை அறிமுகப் படுத்தும் மைக்ரோசாப்ட்

Loading...

புதிய கருவிகளை அறிமுகப் படுத்தும் மைக்ரோசாப்ட்அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் மைக்ரோசாப்ட் விழாவிற்கான அழைப்பிழ்களை அந்நிறுவனம் அனுப்ப துவங்கி விட்டது. இந்நிகழ்வில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ 4 உள்ளிட்ட சில கருவிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விண்டோஸ் 10 கருவிகள் இந்நிகழ்வில் லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களும் சர்ஃபேஸ் ப்ரோ 4 கருவியும் இதோடு வெளியடப்படும் என கூறப்படுகின்றது.

முன்பு வெளியான தகவல்களில் லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் கருவிகள் முறையே டாக்மேன் மற்றும் சிட்டிமேன் என அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தன. லூமியா 950 மாடலில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே ஹெக்ஸாகோர் 808 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 20 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 32 ஜிபி மெமரியும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

லூமியா 950 எக்ஸஎல் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் 810 பிராசஸர் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை பெற அக்டோபர் வரை காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply