பி9983 கிராஃபைட் ஸ்மார்ட் கைப்பேசி இதோ

Loading...

பி9983 கிராஃபைட் ஸ்மார்ட் கைப்பேசி இதோப்ளாக்பெரி நிறுவனம் போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் எனும் புதிய ஸ்மார்ட்கைப்பேசியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்த வரை போர்ஷ் டிசைன் பி 9983 கருவியில் 3.1 இன்ச் டச் ஸ்கிரீன் 720*720 பிக்சல் ரெசல்யூஷன்(Pixel Resolution), 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

2100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கருவியில் 8 எம்பி ப்ரைமரி கமெராவும், 2 எம்பி முன்பக்க கமெராவும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை(Connectivity Option) பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எச்டிஎம்ஐ வழங்கப்பட்டுள்ளது.

ப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் கருவியிள் பிரத்யேக கடவு எண் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது, புதிய கைப்பேசி ப்ளாக்பெரி கருவிகளில் வழங்கப்படும் ப்ளாக்பெரி ஹப், ப்ளாக்பெரி ப்லென்டு மற்றும் ப்ளாக்பெரி வேல்டு போன்ற அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.

போர்ஷ் வடிவமைப்பு, ப்ளாக்பெரி பாதுகாப்பு, கச்சிதமான புதிய கீபோர்டு வடிவமைப்பு மற்றும் இதர சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த கருவியானது இந்தியாவில் ரூ.99,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply