பிரட் கொழுக்கட்டை

Loading...

பிரட் கொழுக்கட்டைமில்க் பிரட் – 1 பாக்கெட்
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 100 கிராம்
ஏலக்காய் – 5
நெய் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 1 கரண்டி


செய்முறை:-

பிரட்டை சுற்றி உள்ள சிவந்த பகுதியை நீக்கி விட்டு பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் நெய்யில் வெல்லம், பொடித்த ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவலைக் கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையானால் சிறிதளவு நீர் சேர்த்துக் கிளறலாம். பின் பிரட் ஸ்லைசை நீரில் நனைத்து பிழிந்து ஒவ்வொரு ஸ்லைசிலும் ஒரு ஸ்பூன் பூரணத்தை நடுவில் வைத்து அழுத்தி மூட வேண்டும். விரிசல் இல்லாமல் அழுத்தி மூடவேண்டும். இது பார்க்க முத்துச்சிப்பி போல் இருக்கும். பூரணம் வைத்த பிரட் ஸ்லைசை ஆவியில் வேக வைத்து எடுத்து அதன் மீது சுடச்சுட வெண்ணெயைத் தடவி ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டாமல் தனித்தனியாக வைத்து ஆற விட வேண்டும். இப்போது பிரட் கொழுக்கட்டை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply