பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

Loading...

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்பிரசவத்திற்கு பின் பெண்களின் உடலில் சத்துக்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின் அத்தகைய சத்துக்களை வழங்குவதில் இந்திய உணவுகள் சிறந்ததாக உள்ளன. அவ்வாறு சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதால் தான், உலகில் இந்திய உணவுகளுக்கு ஒரு மதிப்பு உள்ளது.

மேலும் இந்தியாவில் 10 குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெண்களும், இந்திய உணவுகளை சாப்பிட்டு, நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும், ஒரு நல்ல பாட்டியாகவும் வாழ்கின்றனர். எனவே பிரசவம் முடிந்த பின்னர் பெண்கள் தங்கள் உடலை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக அவர்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்தின் போது நிறைய இரத்தம் உடலில் இருந்து வெளியேறி இருக்கும். எனவே இரும்புச்சத்துள்ள மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இத்தகைய உணவுகள் தாய்க்கு மட்டுமின்றி, தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எனவே இப்போது இந்திய உணவுகளில் எந்த உணவுப் பொருட்களை, பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டுமென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுகளை டயட்டில் சேர்த்து, உடலை ஆரோக்கியமாகவும், வலுவுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

புது அம்மாவிற்கு நெய் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் நெய்யில் பிரசவத்தின் போது ஏற்படும் காயங்களை சரிசெய்யவும், இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாதவிடாயின் போது உடலானது அதிக சோர்வு இருக்கும். எனவே நெய்யை சாப்பிட்டால், இத்தகயை பிரச்சனையை போக்கலாம்.

வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. எனவே பிரசவத்திற்கு பின், அனைத்து பெண்களும் இந்த உணவுப் பொருளை உணவில் சேர்த்தால், பழைய உடல் நிலையை எளிதில் பெற முடியும்.

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் கொய்யாப் பழமும் ஒன்று. இந்த பழத்தில் ஆப்பிளைப் போன்றே அதிகப்படியான அளவில் இரும்பச்சத்தானது நிறைந்துள்ளது. மேலும் இது எளிதில் மார்கெட்டில் கிடைக்கக்கூடியது.

பல் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால், பெண்கள் இதனை நிச்சயம் உணவில் சேர்க்க வேண்டும். இது குழந்தைக்கும், தாய்க்கும் மிகவும் நல்லது.

பூசணி வகைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பாகற்காய் மற்றும் சுரைக்காயில், புதிய அம்மாக்களுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. எனவே மறக்காமல் இதனை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

உலர் பழங்களில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. எனவே பிரசவத்திற்கு பின் பெண்கள் தாங்கள் இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு, முந்திரி, உலர் திராட்சை, வால்நட் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய உணவுகளில் முருங்கைக்காய் மிகவும் பிரபலமானது. ஆகவே நன்கு வலுவோடு இருப்பதற்கு, இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வர வேண்டும்.

முட்டையில் பெண்களின் உடலை வலுவோடும், ஆரோக்கியத்துடனும் வைப்பதற்கான கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே மறக்காமல், முட்டையை தினமும் சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது.

பசலைக் கீரை கீரைகள் அனைத்திலுமே இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கும். குறிப்பாக கீரைகளிலேயே பசலைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளன. எனவே முடிந்த அளவில் கீரையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவது சிறப்பான பலனைத் தரும்.

உடலில் இரத்தத்தை அதிகரிப்பதில் ஒரு சிறப்பான உணவுப் பொருள் தான் பீட்ரூட். எனவே பிரசவத்தின் போது இழந்த இரத்தத்தை மீண்டும் பெறுவதற்கு, பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply